undefined

எல்லாப் புகழும் இறைவனுக்கே...  ஏ.ஆர் . ரஹ்மானுக்கு ஹாலிவுட் இசை விருது... !

 

 நடிகர் பிருத்விராஜ்  நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஆடுஜீவிதம்.  இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம்  ஆடு ஜீவிதம் நாவலினைத் தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் கோட் லைஃப் என்ற பெயரில் மற்ற மொழிகளில்  ரிலீஸ் ஆனது.  மார்ச் மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த இப்படத்தின் கதாநாயகி அமலாபால்.  இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவானது.  


ஆடுஜீவிதம் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும்பாலும் பாராட்டப்பட்ட நிலையில்,  படத்திற்காக HMMA விருதினை ஏ.ஆர். ரகுமான் வென்றுள்ளார். ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது எனப்படும் HMMA விருது ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்கு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் படங்களின் பிரிவில் இந்தப் படத்திற்கு விருது வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இந்திய சினிமாவில்  HMMA விருதை பெரும் முதல் விருதாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த  விருதை ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில்  படத்தின் இயக்குநர் பெற்றுக்கொண்டார். இந்த விருதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ரஹ்மான் நன்றி தெரிவித்துள்ளார்.  அத்துடன் எல்லா புகழும் இறைவனுக்கே என தனக்கே உரிதான தன்னடக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!