undefined

இனி அதிகனமழை பெய்தால் மட்டுமே விடுமுறை...  பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு..!!   !!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது இதனால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்று நவம்பர் 15ம் தேதி கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை  7 வகையான விதிமுறைகள பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 
அதிகனமழை பெய்தால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும் .


பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை முதலில் அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  
மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.  
 பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும்.  மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது


பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட வேண்டும். 
விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்   எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!