undefined

இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க... 24 நாட்கள் விடுமுறை...  2025 ம் ஆண்டு பொதுவிடுமுறை பட்டியல் வெளியீடு!

 

 தமிழகத்தில்   2025 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதன்படி அடுத்த வருடம் 24 நாட்கள் விடுமுறைகள் வருகிறது.  ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை. இதனையடுத்து ஜனவரி 14 தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 16ம் தேதி உழவர் திருநாள், ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினம், பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம், மார்ச் 30 தேதி தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 1ம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளி, மே 1ம் தேதி மே தினம் ஆகியவற்றை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  ஜூன் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை, ஜூலை 6ம் தேதி மொகரம், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றை முன்னிட்டு விடுமுறை. மேலும் செப்டம்பர் 5ம் தேதி மிலாதுநபி, அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 2ம் தேதி விஜயதசமி, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை என மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!