undefined

சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... கனமழை எச்சரிக்கை!

 
சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெங்கல் புயல் காரணமாக கனமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், காரைக்கால் பகுதிகளிலும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த புயல் நாளை நவம்பர் 30ம் தேதி கடலூருக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியிலும், காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!