undefined

ஹாக்கி போட்டி.. 3வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை தட்டி சென்றது இந்தியா!

 

8வது மகளிர் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில், நடப்பு சாம்பியனான இந்தியா (5 வெற்றி) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும், சீனா (4 வெற்றி, 1 தோல்வி) 2வது இடத்தையும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3வது இடத்தையும், ஜப்பான் (1 வெற்றி, 2 சமநிலை), 2 தோல்வி) 4வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் சீனா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீன மகளிர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான இந்தியா மூன்றாவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்திய அணி வீராங்கனை தீபிகா 31வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மொத்தப் போட்டியிலும் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் தீபிகா 11 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன அணியை இந்திய அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!