undefined

ஜார்க்கண்டில் மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்!

 
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இண்டியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 43, காங்கிரஸ் 30, ராஷ்டிரிய ஜனதா தளம் 7, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) 4 தொகுதிகளில் போட்டியிட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜன சக்தி 1 தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இண்டியா கூட்டணியில் ஜேஎம்எம் 34, காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 4, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்தமாக இண்டியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21, ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு 1, லோக் ஜன சக்தி 1, ஐக்கிய ஜனதா தளம் 1 தொகுதியில் வெற்றி பெற்றன. அந்த கூட்டணிக்கு 24 தொகுதிகள் கிடைத்துள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தற்போது 21 இடங்கள் மட்டுமே கிடைத்திருப்பது பின்னடைவாக அமைந்துள்ளது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சம்பய் சோரன், சாராய்கேலா தொகுதியில் 20,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றி குறித்து ராஞ்சியில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், ''இண்டியா கூட்டணிக்கு வாக்களித்த ஜார்க்கண்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக, விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு மனமார நன்றி கூறுகிறேன்'' என்றார். 

முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹேமந்தின் மனைவி கல்பனா, காண்டே தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் கூறும்போது, ''காண்டே தொகுதி மக்கள் என்னை மகளாக கருதுகின்றனர். அவர்களது வளர்ச்சிக்காக அயராது பாடுபடுவேன்'' என்றார்.

முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா 100-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். ஆனால், அவருக்கு இணையாக பாஜகவில் பெண் தலைவர் இல்லை. ஊழல் வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டது அனுதாப அலையை ஏற்படுத்தியது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!