undefined

பழுதடைந்த ஹெலிகாப்டர்.. தூக்கி சென்ற போது கீழே விழுந்து நொறுங்கியது!

 

நேற்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உடைந்த ஹெலிகாப்டரை தூக்கிச் செல்ல ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. உடைந்த ஹெலிகாப்டரை கயிறு மூலம் தூக்கும் போது, ​​ராணுவ ஹெலிகாப்டர் திடீரென நிலைதடுமாறியது. இதையடுத்து, அதில் பொருத்தப்பட்டிருந்த சேதமடைந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. ருத்ரபிரயாக் மாவட்ட சுற்றுலா அதிகாரி ராகுல் சௌபே கூறியதாவது:

கடந்த மே மாதம் கேதார்நாத் வந்த தனியார் ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறால் பழுதடைந்தது. இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரை பழுது பார்த்த இடத்திற்கு கொண்டு செல்ல இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர் நேற்று பயன்படுத்தப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று உடைந்த ஹெலிகாப்டரை கயிற்றால் தூக்கி வானில் பறந்தது. சிறிது தூரம் பறந்த பிறகு, சேதமடைந்த ஹெலிகாப்டரின் எடை மற்றும் பலத்த காற்று காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் நின்றது. அப்போது செயலிழந்த ஹெலிகாப்டருடனான  தொடர்பை விமானி துண்டித்தார்.

மந்தாகினி ஆற்றின் அருகே, ஹெலிகாப்டர் நொறுங்கி நூற்றுக்கணக்கான துண்டுகளாக சிதறியது. மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அவர் கூறியது இதுதான்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா