undefined

கனமழை : இன்று 6 இன்று 6 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்.. கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

 

கடந்த சில நாட்களாகவே கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த  24 மணி நேரத்திற்குள்  115.5 மிமீ வரை கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. 

கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் ஜூலை 5ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை ஜூலை 3ம் தேதி இரவு 11.30 மணி வரை கேரளா-தமிழ்நாடு கடற்கரையில் 'கள்ளக்கடல்' நிகழ்வு குறித்து தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கேரளா-கர்நாடகா-லட்சத்தீவு கடற்கரையோர கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!