undefined

சென்னையில் தொடர் கனமழை... அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு!

 

சென்னையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தென் மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது. இதையொட்டி நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். துணை முதலமைச்சர் ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழையை ஒட்டி சென்னை மாநகராட்சி சார்பில் 329 முகாம்கள் தனியார் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அமைச்சர்கள், மேயர், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் உள்ளனர். மழை நீரை அகற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார். 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!