undefined

தமிழகத்தில் கனமழை... இன்று தேர்வு கிடையாது... பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

 

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிககனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வடகிழக்குப் பருவ மழைக் காரணமாக கடந்த சில நாட்களாகவே தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழைப் பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நவம்பர் 26ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை, முதுநிலை எழுத்துத் தேர்வுகள் என இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கு மற்றொரு நாளில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!