அதிர்ச்சி... இந்தோனேசியா சுமத்ரா தீவில் கனமழை... திடீர் வெள்ளம்... 37 பேர் உயிரிழப்பு!

 


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலையின் சரிவுகளில் கனமழை மற்றும் திடீர்  வெள்ளம் காரணமாக 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .
பருவமழை மற்றும் மராபி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக குளிர்ந்த எரிமலையில்  இருந்து ஏற்பட்ட பெரிய மண்சரிவு காரணமாக, நதி அதன் கரையை உடைத்து, மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள மலையோர கிராமங்கள் வழியாக ஊருக்குள் புகுந்தது. திடீர் வெள்ளம் மக்களை இழுத்துச் சென்ற நிலையில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.


தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோக்களில் இருண்ட பழுப்பு நதிகளாக மாற்றப்பட்ட சாலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மேற்கு சுமத்ராவின் பெசிசிர் செலாடன் மற்றும் பதங் பரிமன் மாவட்டங்களில் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு குறைந்தது 21 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!