undefined

 இலங்கையில் கனமழை... வெள்ளத்தில் 2¼ லட்சம் மக்கள் பாதிப்பு... 4 பேர் உயிரிழப்பு!

 

இலங்கையில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதன் காரணமாக 2¼ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

<a href=https://youtube.com/embed/yzaY6t946fM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/yzaY6t946fM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இதனால், 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் பாதுகாப்பான இடங்களில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை வெள்ளத்தில் சிலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!