undefined

கனமழை... திருச்செந்தூரில் 100 அடி உள்வாங்கிய கடல் நீர்!

 

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதன் காரணமாக சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீர் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.

மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களிலும் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள்களிலும் கடல் நீர்மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்நிலையில் திருச்செந்தூர் கோயில் பகுதியில் நேற்று மாலை அய்யா கோயில் அருகே கடல் நீரானது சுமார் 100 அடி தொலைவு உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன. 

பின்னர் கடல் இயல்பு நிலைக்கு மாறியது. ஆனாலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடினர். திருச்செந்தூர் பகுதியில் நேற்று மாலை சுமார் அரைமணி நேரம் கனமழை பெய்ததால் சாலையெங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!