undefined

கனமழை... செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

 

நேற்று இரவு முதல் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை பிற்பகல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ. மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!