undefined

தூத்துக்குடியில் கனமழை... மாநகராட்சி பேரிடர் கால இலவச தொலைபேசி எண் அறிவிப்பு!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் திடீரென கனமழை பெய்து வந்ததால் குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்தது. பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.

நேற்று மாலை தொடர்ந்து இடி மின்னலுடன் பெய்து வந்த கனமழையால், இடிதாக்கி தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்த டவர் இடி தாக்கியதில், மதுரைக்கு செல்லும் மின்சாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும்  பேரிடர் கால இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரிசெய்திடும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் தூத்துக்குடி மாநகராட்சியின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் எளிதாக தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி அழைப்பு எண் 18002030401 வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் இச்சேவையினை பயன்படுத்தி தங்கள் குறைகளைத் தெரிவித்தால் மாநகராட்சி மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!