தஞ்சாவூரில் கனமழை; நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்!

 

தஞ்சாவூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளன. ஓரிரு நாட்களில் அறுவடையை துவங்குவதற்காக விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் துவங்கி தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. அம்மாபேட்டை, புத்தூர், உடையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து இருப்பதால், விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும் என கவலை தெரிவித்துள்ளனர். மழை காரணமாக சேதமடைந்த பகுதிகளை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!