undefined

நேபாளத்தில் வெளுத்து வாங்கிய மழை.. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. 38 பேர் பரிதாபமாக பலி! 

 

நேபாளத்தில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. வழக்கமாக நாட்டில் மழைக்காலம் செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிவடையும்.ஆனால் இம்முறை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் காத்மாண்டுவில் கடந்த 27ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,053 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மழைக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்தனர். 12 பேரை காணவில்லை.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக காத்மாண்டுவின் ஒரு பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். நகரின் தெற்கு பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த 4 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். காத்மாண்டுவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடும் மழை காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லெஹாக், "நாட்டின் பிற பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சேதம் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது" என்றார். மீட்பு பணிகள் குறித்து பேசிய நேபாள போலீஸ் செய்தி தொடர்பாளர் பிஸ்வோ அதிகாரி, “நாடு முழுவதும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட அனைத்து போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!