சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்!!

 

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக  பல பகுதிகளில் பரவலாக மழை விட்டு விட்டு  பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் திடீரென கனமழையும் பெய்து வருகிறது. சென்னையை தொடர்ந்து அதன் புறநகர் பகுதிகள் , மாவட்டங்களிலும்  பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில்  இந்த மழை மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத்  தெரிவித்திருந்தது. சென்னையில் நேற்று  காலை முதலே வெயில் கொளுத்த தொடங்கிய நிலையில் திடீரென மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சென்னை, கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

மேலும் வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, பெருங்குடி   பகுதிகளில் கனமழை கொட்டியது.  இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமைழை தற்போது பெய்து வருகிறது. இதன்படி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, புரசைவாக்கம், புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், வடபழனி, அசோக்நகர், கோடம்பாக்கம், போரூர்  பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அத்துடன்  புறநகர் பகுதிகளான தாம்பரம், மேடவாக்கம், துரைப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை