undefined

கனமழை... இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று தூத்துக்குடி  மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தற்போது தென் மாவட்டங்கள், டெல்டா  மாவட்டங்களில் பருவமழை  தீவிரமடைந்து வருகிறது.

அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று நவம்பர் 20ம் தேதி புதன்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை  மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார். அதே போன்று இன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீங்க. குறிப்பாக மாணவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்களை தனியே வெளியே அனுப்பாதீங்க.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!