undefined

கனமழை.. ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தாதீங்க... அமைச்சர் அன்பில் மகேஷ்!

 

சென்னையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கனமழை எச்சரிக்கையால் இன்று சென்னை உட்பட 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் நடத்த வேண்டாம் என்றும், ஆன்லைன் வகுப்புகளை கனமழை முடியும் வரையில் ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!