undefined

தொடரும் கனமழை... இன்று நாகையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 

தொடரும்  கனமழை எச்சரிக்கைக் காரணமாக இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக நேற்று வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் காரணமாக நாகை மாவட்டத்திற்கு இன்று நவம்பர்  26ம் தேதி அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை  மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பிறப்பித்துள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!