undefined

  கோவைக்கு கனமழை அலெர்ட்...  நாளை முதல் டிசம்பர் 3 வரை  கனமழை !

 


 
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்கால் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் டிசம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாளை முதல் 3 ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.மேலும் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை மற்றும் அதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது.  


தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெங்ஜால் புயல் கரையைக் கடந்ததும், ஞாயிற்றுக்கிழமை காலை முதல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் வழியாக திங்கட்கிழமை வரை பயணிக்கும் என்பதால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!