undefined

 உஷார் மக்களே... 2 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

 

 
 
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்  மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை  மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு  வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தை ஒட்டிய வடக்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து இன்று மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதியில் நிலவி வருகிறது.இதன் காரணமாக தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!