undefined

இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! குடையோட கிளம்புங்க!

 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்றும், 12 மாவட்டங்களில் கனமழை பெய்தற்கான வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது குடையோட கிளம்புங்க. தற்போது, தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டவ மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக  இன்று நவம்பர் 6ம் தேதி  தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாவான இடங்களில் இடி மின்னலுடன்  கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். அதன்படி  நீலகிரி, கோவை  திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம் , நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் நீலகிரி, கோவை,  திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் நாமக்கல், கருர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

நாளை நவம்பர் 7ம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு,  திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் தூத்துகுடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் .  அத்துடன்  அரபிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் கேரளா-தெற்கு கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி  55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!