undefined

நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ.. பாராசெயிலிங் ... பல நூறு அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பயணி! 
 

 

 
சமூக வலைதளத்தில் தினசரி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. பாராசெயிலிங் செய்ய தயாராக இருக்கும் பயணி மற்றும் உதவியாளருடன் தொடங்கும் இந்த வீடியோ, சில விநாடிகளில் சம்பவத்தை பதிவு செய்துள்ளது. 

பாராசெய்லர் பாதுகாப்பு கம்பிகள் மற்றும் ஹார்னஸ்களுடன் தயாராக இருக்க, ஒரு பாராசெய்லிங் ஆப்பரேட்டர் கூடவே இருந்து உதவி செய்கிறார். ஆனால் அந்த ஆப்பரேட்டருக்கு எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லை.பயணி மேலே எழும்பி வரும் தருணத்தில், உதவியாளரும் கயிறுகளை பிடித்து அவருடனே பறந்து கொண்டிருக்கிறார். 

 

 

ஆரம்பத்தில் அவர் சற்றே நிலை தடுமாறினாலும் பின்னர் சீராக கையாண்டு வருகிறார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் பயணி திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து நேராக கடலில் விழுகின்றார். அந்த பயணி ஏன் திடீரென கீழே விழுந்தார் என்பது சரியாக தெரியவில்லை. வலுவான காற்று, சாதனப் பிழை அல்லது தவறான உடல் நிலை இவைகள் தான் காரணமா என பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவிற்கு பிறகான நிலைமைகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?