உஷார்... மூளையைத் தின்னும் அமீபாவால் 4 பேர் பலி... இந்த தவற மட்டும் செய்யாதீங்க.... சுகாதாரத்துறை எச்சரிக்கை!  

 


 
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில மாதங்களாக  மூளையைத் தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மூளையைத் தின்னும் அமீபா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட 4 பேரும் மருத்துவமனையில்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று குறித்த  உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த  கடிதத்தில் 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும்  மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி, தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரத்துடன் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த்தொற்று குறித்த உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் . இதில் ஏதாவது ஒன்று  தெரிந்தால் கூட உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!