undefined

நேருக்கு நேர் கார்கள் மோதி கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்!

 

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்துள்ள வாயலூர் ஈசிஆர் சாலையில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், நெடுமரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். 

இந்த விபத்தில் கைக்குழந்தையுன் காயமடைந்த ஒரு பெண்ணை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(52). பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர் இன்று காலை கைக்குழந்தையுடன் தனது மருமகளையும் அழைத்துக் கொண்டு கல்பாக்கம் நோக்கி ஈசிஆர் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, வாயலூர் அருகே சென்னை-பாண்டிச்சேரி நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று இவர்களது கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், வெங்கடேசன் வந்து கார் நிலைத்தடுமாறி மரத்தின் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த, சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலையில், காயமடைந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வெங்கடேசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதிரே மற்றொரு காரில் வந்த இருவர் லேசான காயமடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!