எனக்கு பிரதமராக பலமுறை ஆஃபர் வந்தது... நிதின் கட்காரி அட்ராசிட்டி !
இந்தியாவில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி. இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். இவர் தனக்கு பலமுறை பிரதமராகும் ஆஃபர் வந்தது எனவும், தனக்கு அந்த எண்ணம் இல்லை . அதனால் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் நிதின் கட்காரியிடம் நீங்கள் பிரதமராக மாறினால் உங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் எனக் கூறியதற்கு நிதின் கட்காரி எனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை எனவும் நான் பிரதமர் ஆனால் நீங்கள் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் பதில் கூறியுள்ளார்.
அத்துடன் தனக்கு பலமுறை பிரதமராகும் ஆஃபர் வந்தது என்றும் ஆனால் அந்த பதவியை தான் நிராகரித்து விட்டதாகவும் பெருமை பொங்க கூறியுள்ளார். தனக்கு பிரதமராகும் ஆசை இல்லை எனவும் என்னுடைய நோக்கம் அது கிடையாது எனக் கூறினார். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா எனக் கேட்டதற்கு இந்த கேள்வியே என்னிடம் கிடையாது.
என்னுடைய நம்பிக்கையுடனும் சித்தாந்தத்துடனும் நான் வாழ்கிறேன் என பதில் அளித்துள்ளார். நிதின் கட்காரி பிரதமராகும் வாய்ப்பு தனக்கு பலமுறை வந்தது என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!