undefined

ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்று பெண்ணிடம் அத்துமீறிய  காவலர்!  

 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள சந்தவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (51). திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டரை பார்க்க அவரது உறவினரான நாட்றம்பள்ளியைச் சேர்ந்த 28 வயது திருமணமான பெண் அடிக்கடி வந்து செல்வார். அப்போது  நாராயணசாமிக்கும் இந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இறுதியில், நாராயணசாமி அப்பெண்ணை போலீசில் சேருமாறு அறிவுறுத்தினார். இதற்காக திருப்பத்தூரில் உள்ள தனியார் போலீஸ் பயிற்சி வகுப்பில் சேர்த்துள்ளார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், நாராயணசாமியும், பெண்ணும், திருப்பத்தூரில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது நாராயணசாமி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணசாமியை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்பி ஆல்பர்ட்ஜான், ஏட்டு நாராயணசாமியை நேற்று சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!