undefined

’5000 ரூபாய் திருடிட்டான்.. அவன வர சொல்லு’.. குடிபோதையில் போலீசிடம் அத்துமீறிய இளம்பெண்!

 

கரூர் பேருந்து நிலையம் வெளியே மேற்கு பிரதட்சணம் சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகில் அரசு அனுமதி பெற்ற மதுக்கடை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த பாரில் அரசு அனுமதித்த நேரத்தையும் மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு மது அருந்திவிட்டு வெளியே வந்து பலத்த சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தகவலின் பேரில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அப்பகுதிக்கு வந்து பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ​​தான் பல்லடத்தைச் சேர்ந்தவர் என்று கூறிய இளம்பெண், குடிபோதையில் தன்னுடன் வந்தவர் 5000 ரூபாயை பறித்துச் சென்றுவிட்டதாகவும், அந்த நபரை அழைத்து வருமாறும் கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார்.

மேலும், இது குறித்து நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று புகார் அளிப்பதாக கூறினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில், குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட பெண்ணிடம், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!