ரூமுக்கு அழைத்து பலாத்காரம் செய்ய முயன்றார்.. மீண்டும் வெடித்த பிரிஜ் பூஷன் விவகாரம்.. சாக்ஷி மாலிக் பரபரப்பு புகார்!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக ஓய்வு பெற்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா போன்ற மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் நீக்கப்பட்டார்.
அப்போதும் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்யுத்த வீரர்களும், பெண்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு பிரிஜ் பூஷன் சரண் சிங் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக ஓய்வு பெற்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.சாக்ஷி மாலிக் தனது சுயசரிதையை சாட்சி என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் போது, பிரிஜ் பூஷன் சரண் சிங், எனது பெற்றோருடன் செல்போனில் பேசுவதற்காக என்னை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்தார். அதன்படி நானும் சென்றேன். அங்கு என் பெற்றோரை செல்போனில் அழைத்து என்னிடம் கொடுத்தார். போட்டி மற்றும் பதக்கம் நடந்த சம்பவத்தையும் கூறினேன்.
பின்னர், அழைப்பை துண்டித்த பிறகு படுக்கையில் அமர்ந்திருந்த என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். நான் உடனே அவரை தள்ளிவிட்டு சத்தமாக அழ ஆரம்பித்தேன். பின்னர், நான் விரைவாக அங்கிருந்து புறப்பட்டேன், என்றார். பிரிஜ் பூஷன் சக்தி வாய்ந்தவர் என்றும், மல்யுத்தப் பயணத்தை தொடர வேண்டும் என்றும் கூறியதால், வெளியே கூறவில்லை என்றும் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். சாக்ஷி மாலிக்கின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!