undefined

HBD விஜயகாந்த் | இத்தனை கெத்து காட்டியிருகாரா?!

 

இறந்தாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான் என்பார்கள். அப்படி கட்சி பேதமில்லாமல் மக்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் விஜயகாந்த். சிவாஜி அரசியலில் தோற்றார் என்பதற்காக அவருக்கு ஆதரவில்லை என்பதில்லை. அவர் எதிர்த்து வந்த திமுககாரர்களும் அவரது படத்தைப் பார்த்து நடிப்பை சிலாகித்தார்கள். அப்படி விஜயகாந்தை பலரும் தங்கள் இல்லத்தில் ஒருத்தராய் தான் பார்த்தனர்.
இன்று மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 72வது பிறந்தநாள். அவரது வாழ்வின் சில தருணங்களையும், சாதனைகளையும் பார்க்கலாம் வாங்க. 

நடிகர் விஜயகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 1999ம் ஆண்டு பொறுப்பேற்றது மிக முக்கியமான காலக்கட்டம் எனலாம். அந்த சமயத்தில் சங்கம் மிகப் பெரும் கடன் சுமையில் இருந்தது. வெளிநாடுகளில் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி அந்தக் கடனை அடைத்தது, நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டம் என பல விஷயங்களை செய்து கொடுத்தார். நடிகைகளுக்கு கட்டாயம் கேராவன் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்தியது விஜயகாந்த் தான்.
 
திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுடன் போட்டியிடும் விதமாகவும் மக்கள் பணி செய்யும் நோக்கிலும் விஜயகாந்த் தேமுதிக என்ற தனது அரசியல் கட்சியை கடந்த 2005-ல் தொடங்கினார். இது திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக பார்க்கப்பட்டது. பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளோடு தேமுதிக கூட்டணி வைத்தது. பின்னர் விஜயகாந்தின் மோசமான உடல்நிலை மற்றும் கட்சி எடுத்த சில தவறான முடிவுகள் காரணமாக தேமுதிகவின் சரிவு தொடங்கியது.

இளம் நடிகர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியர் விஜயகாந்த். விஜய், சூர்யா போன்றோரின் ஆரம்ப கால படங்களில் இவர் நடித்தது அவர்களின் சினிமா பயணத்தில் பேருதவியாக அமைந்தது. அதுபோல, படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு கொடுக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தினார். தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா