பெருந்துயர்... ஹாத்ரஸ் சம்பவ பலி 134 ஆக அதிகரிப்பு; போலே பாபா தலைமறைவு... அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்... முழுவிபரம்!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ள நிலையில், சத்சங் நிகழ்ச்சிக்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நாட்டையே உலுக்கிய துயரச் சம்பவம், உ.பி.யின் மேற்குப்பகுதியிலுள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் நேற்று நிகழ்ந்தது. ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தி இருந்தார். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் ர்ண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த கோர விபத்து குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறிய அளவிலானக் கூட்டம் எனக் கூறி ஹாத்ரஸ் மாவட்ட அரசு நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டதால் இந்த கூட்டத்திற்கு வெறும் 48 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்காக கூடியப் பக்தர்களை அப்படியே தவிக்க விட்டு, தனது சொகுசு வாகனத்தில் அங்கிருந்து போலே பாபா கிளம்பி சென்றுள்ளார். பக்தர்கள் நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழந்தது கேள்விப்பட்ட பிறகும் சம்பவ இடத்திற்கு அவர் திரும்பி வரவே இல்லை. உயிரிழந்த, காயமடைந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளுக்கும் போலே பாபா செல்லவில்லை. மாறாக, உடனடியாக தனது செல்போனை அணைத்து விட்டு விட்டு தலைமறைவானார்.
இந்நிகழ்ச்சி மீது வழக்கு பதிவு செய்த உபி போலீசார், போலே பாபாவையும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிர்வாகத்தினரையும் தேடி வருகின்றனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 134 என உயர்ந்திருப்பதாக உ.பி தலைமை செயலாளர் மனோஜ் குமார்சிங் தெரிவித்துள்ளார். இவர்களில் 126 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!