கோர விபத்து... நேருக்கு நேர் மோதிக் கொண்ட ரயில்கள்.. 15 பேர் பலி... உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்!
இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் உள்ள டாக்காவின் வடகிழக்கில் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்நாட்டின் பைரப் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. சரக்கு ரயில் எதிர்திசையில் வந்த பயணிகள் ரயிலின் மீது மோதியதில், இரண்டு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"நாங்கள் 15 உடல்களை மீட்டுள்ளோம், பலர் காயமடைந்துள்ளனர்." என்று பைரப்பில் உள்ள அரசு அதிகாரி சாதிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக் கூடும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கவிழ்ந்த பெட்டிகளுக்கு அடியில் சில உடல்கள் சிக்கியிருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் சாதிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காயடமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாலை 4:00 மணியளவில் நடந்த இந்த விபத்தானது, ஒரு ரயில் மற்றொரு ரயில் வரும் பாதையில் நுழந்ததால் ஏற்பட்டதாகவும் சாதிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்துக்கள் வங்கதேசத்தில் பொதுவானவை. அடிக்கடி அந்நாட்டில் ரயில் விபத்துகள் நடக்கின்றன. அத்தகைய விபத்துகள் பெரும்பாலும் மோசமான சிக்னல், அலட்சியம், பழைய தடங்கள், மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்படுகின்றன.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!