பரபரப்பு.. மாடி முட்டி முதியவருக்கு படுகாயம்.. வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை..!!
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பகுதியில் நேற்று காலை வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி சுந்தரம் (80) என்பவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் காயமடைந்தார். அவர் தலையில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே திருவல்லிக்கேணி சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 பிரிவுகளின் கீழ் ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஆணையர் ராதாகிருஷ்ணன், திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து 5 மாடுகளை பிடித்து, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.