குஷியில் மாணவர்கள்... இன்று பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

 

இன்று ஜூலை 10ம் தேதி காலை தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதையடுத்து மாணவர்கள் குஷியில் உள்ளனர். தமிழகம் முழுவதும் பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

தமிழகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவையும் அடங்கும்.

இந்த கல்லூரிகளில் பி.இ., பி டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்நிலையில் ஒற்றை சாளர முறையில் ஆன்லைன் மூலம்  பொது கலந்தாய்வு நடத்தப்படும். அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணைய வழி விண்ணப்ப பதிவு மே 6ம் தேதி முடிவடைந்த நிலையில் ஜூன் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டன.

பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். 198,853 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். ஜூன் 12ம் தேதி சமவாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 13ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளார். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தரவரிசைப் பட்டியலை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!