undefined

தமிழகத்தில் டிச.24 முதல் மாணவர்களுக்கு விடுமுறை... அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியானது!

 

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. மொத்தம் எத்தனை நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை தெரியுமா?  முழு லிஸ்ட் இதோ..

6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும்.

அதே போன்று 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 16ம் தேதி தேர்வுகள் துவங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும். டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு டிசம்பர் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறுகிறது. 


அதன்படி, 6 முதல் 9ம் வகுப்பு வரைக்கும் 
டிசம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை -  தமிழ்
டிசம்பர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை-  விருப்ப மொழி
டிசம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை- ஆங்கிலம்
டிசம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை - கணிதம்
டிசம்பர் 18ம் தேதி புதன்கிழமை - உடற்கல்வி
டிசம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை- அறிவியல்
டிசம்பர்  23ம் தேதி திங்கட்கிழமை- சமூக அறிவியல் தேர்வு
6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

 10ம் வகுப்பு அட்டவணை

டிசம்பர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை- தமிழ்
டிசம்பர் 11ம் தேதி புதன்கிழமை - விருப்ப மொழி
டிசம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை - ஆங்கிலம்
டிசம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை - கணிதம்
டிசம்பர் 19ம் தேதி வியாழக்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23ம் தேதி  திங்கட்கிழமை - சமூக அறிவியல் 
  
11ம் வகுப்பு அட்டவணை:

பிளஸ்-1 வகுப்புக்கு
டிசம்பர் 9ம் தேதி-  தமிழ்
டிசம்பர் 10ம் தேதி - ஆங்கிலம்
டிசம்பர் 12ம் தேதி - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்) ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

டிசம்பர் 16ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

டிசம்பர் 18ம் தேதி - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

டிசம்பர்  20ம் தேதி - இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள்

டிசம்பர் 23ம் தேதி - கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங்

 
12ம் வகுப்பு மாணவர்களுக்கு  

டிசம்பர் 9ம் தேதி -  தமிழ்

டிசம்பர் 10ம் தேதி - ஆங்கிலம்

டிசம்பர் 12ம் தேதி - கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்   பாடங்கள். 

டிசம்பர்16ம் தேதி - கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங்.

டிசம்பர் 18ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பேசிக் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்.

டிசம்பர் 20ம் தேதி - வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 23ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் தேர்வும் நடக்க உள்ளது. 

டிசம்பர் 24 ம் தேதி - செவ்வாய்க்கிழமை முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கி ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!