undefined

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. இளைஞரை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

 

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள மடிவாலா காவல் நிலைய பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனது மொபைல் போனில் டேட்டிங் செயலி மூலம் நிகல் ஹுசைன் என்ற நபருடன் உறவில் இருந்தார். ஆரம்பத்தில் இருவரும் தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தனர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக நிகல் ஹுசைனின் வாக்குறுதியை நம்பிய அந்த இளம் பெண், அவருடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார்.இந்நிலையில் ஒரு நாள் அந்த இளம் பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் நிகல் உசேன். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து இளம்பெண்ணிடம் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் கருவுற்ற பெண்ணின் கர்ப்பத்தை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. நிகல் உசேன் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து, மடிவாலா காவல் நிலையத்தில் நிகல் உசேன் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நிகல் உசேன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நிகல் உசேனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!