பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடப்பட்டுள்ளது. அதிகாரிகள், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆரம்பம் முதலே அதிகாரிகள் தங்கள் பணிகளை தவறாது செய்ய வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழகத்தில் பள்ளி வாகனங்களால் வருடம் முழுவதும் பல மாவட்டங்களில் விபத்துக்கள் நேர்கின்றன. நேரத்திற்கு செல்லாமல், அவசர அவசரமாக குழந்தைகளை வீட்டில் இறக்கி விட்டு, கண்மூடித் தனமாக வாகனங்களை இயக்குவது, முதலுதவி பெட்டி இல்லாமல் வாகனத்தை இயக்குவது, மாணவிகளிடம் அத்துமீறுவது என பள்ளி வாகனங்களில் பெரும்பாலானவை அதிர்ச்சியளிக்கின்றன.
இந்நிலை பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். அதே போன்று பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகானங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும்.
கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க வேண்டும். ஓட்டுநர்களுக்குத் தினமும் சுவாச சோதனை செய்தபின் தான் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும். பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாளை ஏப்ரல் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தனியார்ப் பள்ளிகள்) உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் மாணவியர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகாரையடுத்து தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!