undefined

”பள்ளி நிகழ்வுகளை  வரைமுறைப்படுத்த  வழிகாட்டி நெறிமுறைகள்”... முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

 

 தமிழகத்தின் தலைநகர் சென்னையில்   உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை அசோக் நகரில் செயல்பட்டு  வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு தற்பொழுது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
அந்நிகழ்ச்சியில் பேசிய மகா விஷ்ணு, மோட்டிவேஷனல் பேச்சு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். அதாவது, பாவ, புண்ணியம், முற்பிறவி போன்றவற்றை நியாயப்படுத்தும் வகையிலும்,  குருகுலக் கல்வி குறித்து பேசுகிறார், அறிவியலுக்கு புறம்பான பல விஷயங்களை போகிற போக்கில் பேசிக் கொண்டே இருந்தார்.  ஆசிரியர் ஒருவர் அவரின் பேச்சை தடுத்து நிறுத்தி ஆசிரியர் கேட்டதும் உங்கள் பெயரை சொல்லுங்கள் என உரத்த குரலில் அவர் கேட்கிறார். ‘இது தப்பு’ எனவும்,  மறுபிறவி பற்றி ஏன் சொல்கிறீர்கள் என்று அந்த ஆசிரியர் கேட்டதற்கு மறுபிறவி பற்றி யார் சொல்லிக் கொடுப்பார்கள்.. என பதில் கூறுகிறார். எதற்கு ஆன்மீக சொற்பொழிவு என கேட்டதற்கு ஆன்மீகம் என்றால் என்ன என விதண்டாவாதமாக அந்தச் சொற்பொழிவாளர் ஆசிரியரிடம் கேட்கிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை