துயரம்... இடுப்பளவு தண்ணீர்... ஆற்றில் நீந்தி சடலத்தைக் கொண்டு செல்லும் அவலம்... கதறும் மக்கள்!
இடுப்பளவு தண்ணீர் ஓடும் ஆற்றைக் கடந்து தான் இடுகாட்டுக்குச் செல்ல முடியும். ஊரில் யார் இறந்தாலும் அவரது சடலத்தை இந்த இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஆற்றைக் கடந்து தான் எடுத்து செல்லும் நிலைமை இருந்து வருகிறது. எங்களது பல வருஷ கோரிக்கை.. ஆனாலும் எந்த அரசும் இதுவரைக் கண்டுக்கொள்ளவில்லை என்று கதறுகிறார்கள் மக்கள்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீரசோழபுரம் என்கிற கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் யாரேனும் இறந்தால், அப்பகுதி மக்கள் இறந்தவரை அடக்கம் செய்வதற்காக, சடலத்தைத் தூக்கிக் கொண்டு ராஜன் இடுப்பளவு நீர் இருக்கின்ற வாய்க்காலில் நீந்தி இறந்தவரின் சடலத்தை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இப்படி சென்று தான் இறுதி காரியங்களைச் செய்து வருகின்றனர்.
இதனிடையே இடுகாட்டிற்கு செல்ல ராஜன் வாய்க்காலில் பாலம் கட்ட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வந்த கலியமூர்த்தி (92) என்ற முதியவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
ஊர் மக்கள் அவரை ராஜன் வாய்க்காலில் நீந்தி உயிரை பணயம் வைத்து இடுகாட்டிற்கு தூக்கி சென்றனர். மேலும், இந்த கிராமத்தில் யாராவது இறந்தால், அவரது உடலை தண்ணீருக்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் வாழை மட்டைகளை பயன்படுத்துகின்றனர். எனவே, கிராம மக்களின் நலன் கருதி ராஜன் வாய்க்காலின் குறுக்கே மாவட்ட நிர்வாகம் புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!