undefined

துயரம்... ‘ப்ளீஸ்... பஸ் படியில தொங்காதீங்க...’ மகனின் வகுப்பறையில் காலில் விழுந்து கதறிய மாணவரின் தந்தை!

 

தன் மகன் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி  உயிரிழந்த நிலையில், மகனின் நண்பர்களிடம், தயவு செய்து படிகளில் தொங்கி பயணம் செய்யாதீங்க என்று தந்தை கதறியது மேலும் துயரத்தை அதிகரிக்க செய்தது.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கைலாஷ் என்ற மாணவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பி சென்றுக் கொண்டிருந்த போது, பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர் கைலாஷ் பயணித்துள்ளார்.

இதில் திடீரென கைப்பிடி தளர்ந்த நிலையில், பேருந்தில் இருந்து கைலாஷ் கீழே விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரம் கைலாஷ் தலை மீது ஏறி நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் மாணவரின் குடும்பத்தினரையும், உறவினர்களையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இது போன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்பதை வலியுறுத்தி கடலூர் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், உயிரிழந்த மாணவர் கைலாஷுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாணவர் கைலாஷ் படிக்கட்டில் பயணம் செய்ததால் என்ன நடந்தது, அவரது குடும்பத்தினர் எப்படி கதறி அழுகிறார்கள், எல்லோருக்கும் எவ்வளவு துன்பம் என்று போலீஸார் சக மாணவர்களுக்கு விளக்கினர்.

அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட உயிரிழந்த மாணவன் கைலாஷின் தந்தை, தனது மகனின் வகுப்புத் தோழர்களிடம் பேச முடியாமல் மாணவர்களின் காலில் விழுந்து ‘பாத்து போங்கப்பா... படியில் தொங்க வேண்டாம்’ என கதறி அழுதார். இது அங்கிருந்த மாணவர்களை சிந்திக்க வைத்தது மட்டுமின்றி, அனைவரையும் கதறி அழ வைத்தது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!