undefined

பெரும் ஷாக்.. இளம் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

 

இலங்கையில் உடப்புவ, மதுரங்குளிய பிரதேசங்களில் வசித்து வந்த இளம் ஜோடிகள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த காதல் ஜோடி கடந்த 30 மற்றும் 31ம் தேதிகளில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. உடப்பு சின்னபத்வ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய கவீஷா லிவேரா என்ற இளைஞனும், மதுரங்குளி பெட்ரிக் மாவத்தையைச் சேர்ந்த நிம்சனி பிரமோதிகா என்ற 19 வயதுடைய இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

இருவரும் பள்ளி நாட்களில் இருந்தே காதல் உறவில் இருந்ததாகவும், பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 30ஆம் தேதி மதியம் இந்த இளைஞன் உயிரிழந்த நிலையில், மறுநாள் 31ஆம் திகதி மாலை அவரது காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் மகளை மீட்ட தந்தை, முந்தலம மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக   மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளன. இவர்களின் மரணம் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை