பெரும் அதிர்ச்சி.. தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து பயங்கர விபத்து.. 40 மாணவர்கள் படுகாயம்!
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவை ஒட்டியுள்ள பாரபங்கி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தின் முதல் தள வராண்டாவின் தளம் இடிந்து விழுந்ததில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட 40 மாணவர்கள் காயமடைந்தனர். விபத்தை தொடர்ந்து, பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, காவலர்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பின், இடிந்து விழுந்த பால்கனியின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மாணவர்கள் மீட்கப்பட்டனர். விபத்து குறித்து பாராபங்கி மாவட்ட மாஜிஸ்திரேட் கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள ஜஹாங்கிராபாத் மருத்துவமனையில் காயமடைந்த 25 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்குள்ள மாணவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும், முதல் தளத்தில் சிக்கியுள்ள குழந்தைகள் மீட்கப்பட்டு அதன் தளத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், மறு உத்தரவு வரும் வரை பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதும் என்றும்ம் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!