undefined

பெரும் அதிர்ச்சி.. கோர விபத்தில் சிக்கிய ஐயப்ப பக்தர்களின் வாகனம்.. 7 பேர் படுகாயம்!

 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பெரியகுளம் அருகே திண்டுக்கல் தேனி நெடுஞ்சாலையில் காரில் சபரிமலைக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த பிக்-அப் வாகனத்தின் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர்  சென்ற நிலையில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் விபத்துக்குள்ளான காரில் இருந்து பக்தர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வாகனத்தின் ஓட்டுநருக்கு மட்டுமே தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் நால்வருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவன் உட்பட இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!