பெரும் அதிர்ச்சி.. கிணற்றில் அடுத்தடுத்து விழுந்து இருவர் பலியான சோகம்!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 60 அடி ஆழ்துளை கிணறு உள்ளது. கிணற்றை ஆழப்படுத்தும் பணிக்கு கீரியூர் பகுதியை சேர்ந்த பச்சியப்பன் (50) என்பவரை கணேசன் அழைத்தார்.
கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தெரிகிறது. வெடிகுண்டு தாக்கியதில் கிணற்றின் ஓரத்தில் மண் சரிந்து விழுந்தது. அதை அகற்ற முயன்ற பச்சியப்பன், எதிர்பாராதவிதமாக மேலும் கீழே விழுந்து நிலச்சரிவில் சிக்கினார். உடனடியாக மற்ற தொழிலாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் பச்சியப்பனை மீட்டு எடுத்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பக்கத்து விவசாய தோட்டத்தில் பணிபுரியும் பெண்கள் விரைந்து வந்து பார்த்தபோது பச்சியப்பன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் விருதனூர் பகுதியை சேர்ந்த முருகம்மாள் (51) என்பவர் கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுபற்றி தகவல் கிடைத்ததும் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில், அதனை பார்க்க சென்ற பெண்ணொருவரும் அதே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!