undefined

பெரும் ஷாக்.. போலியோ முகாமுக்கு முன் நடந்த பயங்கர தாக்குதல்.. 49 பேர் பரிதாப பலி!

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். சிலர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஸாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக பலருக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காஸாவில் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு 8 மணி நேர போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ முகாம் செயல்படத் தொடங்கும் முன், மருத்துவ அதிகாரிகள் நாசர் மருத்துவமனை வார்டுகளில் அடையாள முகாம் நடத்தி சில குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

2,000க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூகப் பணியாளர்கள் முகாமுக்குத் தயாராகி வரும் நிலையில், காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் ஒன்றான நசீரத்தில் வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காஸாவில் இடம்பெற்ற தொடர் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், பயங்கரவாதிகளை தாக்கி அவர்களது ராணுவ கட்டமைப்புகளை அழித்ததாக இஸ்ரேல் படைகள் கூறின.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா