undefined

பெரும் அதிர்ச்சி.. பள்ளி மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியர்!

 

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், காலையில் பள்ளிக்கு தாமதமாக வந்த சிறுமியின் தலைமுடியை ஆசிரியர் வெட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியான கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

காலையில் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா வெட்டினார். தண்ணீர் பற்றாக்குறையால் காலையில் பள்ளிக்கு தாமதமாக வந்த 18 மாணவர்களின் தலைமுடியை வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர் சாய் பிரசன்னா நான்கு மாணவர்களை உடல் ரீதியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்தார்.

மேலும் நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். ஆனால், இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக சாய் பிரசன்னா தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!