undefined

பெரும் அதிர்ச்சி..  அடித்து கொன்று கால்வாயில் வீசப்பட்ட கர்ப்பிணி.. தீவிர விசாரணையில் போலீசார்!

 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் (40), தேவி (34). மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் தேவி , ​​திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி வீட்டில் எம்ப்ராய்டரி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற தேவி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் தேவியை காணாததால், நேற்று சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

இதனிடையே திருமங்கலம் பள்ளத் தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் பெண் சடலம் கிடப்பதாக காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ஏஎஸ்பி. உதயகுமார் தலைமையிலான போலீசார், நிர்வாணமாக இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன தேவி என போலீசார் உறுதி செய்தனர்.

இந்நிலையில், தேவி உடலில் உள்ள காயங்களால் அடித்துக் கொல்லப்பட்டது போலீஸாருக்கு தெரியவந்தது. கர்ப்பிணி பெண்ணை கொன்று உடலை கழிவுநீர் கால்வாயில் வீசியது யார் என்பது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!