பெரும் அதிர்ச்சி.. ஒலிம்பிக் வீராங்கனையை தீ வைத்து கொல்ல முயற்சி.. காதலன் வெறிச்செயல்!
கென்யாவின் ரெபெக்கா செப்டேஜி (வயது 33) 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டத்தில் 44வது இடத்தைப் பிடித்தார். இவரது காதலன் டிக்சன் என்டிமா என்ற ஆண். சில நாட்களுக்கு முன்பு, ரெபெக்கா, டிரான்ஸ் நசோயாவில், பல தடகள பயிற்சி மையங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் ஒரு நிலத்தை வாங்கினார். இதனால், ரெபெக்காவுக்கும் அவரது காதலனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது தீவிரமடைந்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, பெட்ரோல் வாங்கி டிக்சன் ரெபெக்கா மீது ஊற்றி கொல்ல முயன்றார். இதனால், ரெபேக்காவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும், காதலன் டிக்சனும் படுகாயம் அடைந்தார்... இருவரும் தற்போது எல்டோரெட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரெபெக்காவுக்கு 75% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் பெண் விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. ஆம், 2022ல் கென்யாவில் பிறந்த பஹ்ரைன் தடகள வீராங்கனை டமரிஸ் முத்திக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது. அவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதேபோல், 2023 உகாண்டா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் பெஞ்சமின் கிப்லாகாட் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!